Thursday, April 15, 2010

வன பத்திரகாளி



உரல் சத்தமும்
உலக்கை சத்தமும்
கேட்காத....

அடர் வனத்தின்
நடுவில் விட்டிருந்தால்
வன பத்திரகாளி

கன முலை
தழுவும் சர்பங்களையே
மாலைகளாகவும்
சருகுகளை அர்ச்சனைகளாகவும்
கொண்டு

அரை நுற்றாண்டு
வரலாறுக்கு பிறகு

எழாவது நிழற் சாலையின்
முன்றாவது பிரிவில்
வன அம்பிகையாக
நகரின் நடுவில்
அருள் பாலித்து கொண்டு இருக்கிறாள்

நீங்கள் யாரேனும்
அவ்வழியே கடந்து சென்றால்
சருகுகள் கொண்டு அவளுக்கு
அர்ச்சனை செய்து வாருங்கள்

மன மகிழ்ந்து
வரமோ சாபமோ
அருளக்குடும்

மணியன்

வாழ்க்கை ! ?



சொல்லவொண்ண
துயரங்களின் நீட்சியாய்
கடந்தும், கடத்தியும்
செல்கிறது வாழ்க்கை

சிரித்து கழித்து
அழுது மருங்கி
குடி முயங்கி
கலைத்து விழித்து
கனன்று வாழ்ந்து
சிதை தழல் மூண்டு
பொசுங்கி நாரி

முழுதாய் அறியாமலும்
புரியாமலும்

அடர் வனத்தின் நடு மரம்போல
அறியப்படாமலே போய் விடுமோ
வாழ்க்கை

Friday, April 9, 2010



பிரதான சாலையின்
தெரு முக்கில் எதிர் பாராமல்
சந்திக்கிறோம்

தேனீர் பருகலுக்கும்
புகைபதற்கும் இடையே

பிரிவிலிருந்த நாட்களைபற்றி
இருக்கின்ற வேலையைபற்றி
முகம் மறந்த நண்பர்களைபற்றி
சேர்ந்திருந்த நாட்களைபற்றி
பகிர்ந்து கொள்கிறோம்...

தேனிரும் சிகரெட்டும் முடிந்திருந்த
தருணத்தில் இருவருமே
"அவசர வேலை இருப்பதாய் "
விடை பெற்று கிளம்புகிறோம்

இறுதி வரை நீயும் கேட்கவும் இல்லை
நானும் தரவில்லை அவரவர்
முகவரிகளை...

Monday, October 12, 2009

பஞ்சம் - நவநீ திருச்சி

வயலில் விழுந்த என் வியர்வை துளி
சாக கிடந்த பயிர்களுக்கு இரையாயின
மழைக்குதான் பஞ்சமோ
இல்லை மனங்களுக்குதான்

Thursday, September 17, 2009

சோழமண்டலத்திற்கு வரவேற்கிறோம்

எத்தனையோ பேர் எழுதி குவித்து
விட்டார்கள், நாங்கள் என்ன எழுதி விடபோகிறோம் பொறுத்திருங்கள்!!! விரைவில் சமுகம் , இலக்கியம், கலை, பண்பாடு பொருளாதாரம், அரசியல், சினிமா பற்றி தங்களது கருத்துக்களை எந்த மனத்தடைகளும் இல்லாமல் பதிவு செய்ய வருகிறார்கள் ....
சோழம ண்டல நண்பர்கள்.